சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் (படங்கள்)
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க அதிபர் தெரிவு உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் நாடாளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(10.00 AM)
முதலாம் இணைப்பு
சிறிலங்காவின் புதிய அதிபராக நாடாளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 134 வாக்குகளை பெற்று 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார்.
சிறிலங்காவின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டதை தொரடந்து சபையில் விசேட உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க "எனது வாழ்க்கையில் நாடாளுமன்றில் அதிக காலத்தை செலவழித்துள்ளேன் என குறிப்பிட்டதை தொடர்ந்து தனது பதவி பிரமாணம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற வேண்டும்" என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
அதற்கமைய 8 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.