சர்ச்சையில் முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியல்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்ற பல கட்சிகள் இதுவரை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அனுப்பவில்லை என தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெயர்களை அனுப்பி வைத்ததன் பின்னர் வர்த்தமானியில் பெயர்கள் வெளியிடப்பட உள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் 4 தேசியப்பட்டியல் பதவிகளும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒரு நாடாளுமன்ற பதவியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு நாடாளுமன்ற பதவியும் உள்ளன.
வர்த்தமானி அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளதுடன், அதில் ஒன்றுக்கு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை பெண்ணொருவருக்கு வழங்கினால் அதற்கு அவர் தகுதியானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்சியின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளர் ஷர்மிளா பெரேரா தெரிவித்துள்ளார்.
ரணில் தரப்பு
கூட்டணி கட்சிகளுக்கும் தனது கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அக்கட்சி பெற்றிருந்த தேசியப்பட்டியல் பதவிக்கு தற்போதுள்ள தகுதிக்கு ஏற்ப செயற்படுவது தவறோ தன்னிச்சையான செயலோ அல்ல எனவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.
அத்தோடு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான பிரேரணை அதன் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |