இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (21.05.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 5.00 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் அங்கீகரிக்கப்படவுள்ளன.
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |