இலங்கை அரசை விட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிலை வகித்தனர் - அடித்துக் கூறும் சாணக்கியன்
Sri Lanka
Parliament
By Vasanth
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொழிநுட்பத்துறையின் ஆற்றலுக்கு நிகரான திட்டங்கள் இதுவரையில் நாட்டில் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், 2003ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிடெக் எனும் தகவல் தொழிநுட்பத் திட்டத்தை அறிமுகம் செய்து அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என்று கூறினாலும், தகவல் தொழிநுட்பத்துறையில் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்தனர்.
இதற்கு ஆதாரமாக வன்னி டெக் தொடர்பிலான தகவல்களை சபையில் ஆவணப்படுத்த முடியும் என்றார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி