சூடுபிடிக்கவுள்ள நாடாளுமன்ற விவாதம்- கையளிக்கப்பட்டது நம்பிக்கையில்லா பிரேரணை!
parliament
sri Lanka
mahinda yapa abeywarthana
By Kalaimathy
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்ககையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி