புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று கூடுகிறது

Parliament of Sri Lanka Budget 2025
By Jaso Jan 07, 2025 12:27 AM GMT
Report

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்றம் இன்று (07) கூடவுள்ளதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, புத்தாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (பட்ஜெட் விவாதம்) பெப்ரவரி 17ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

சபாநாயகர்  வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன (Speaker Dr. Jagath Wickramaratne)தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அண்மையில் (31) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது. இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று கூடுகிறது | Parliament To Meet Today

இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது.

முதலில் இதை சுத்தப்படுத்துங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்

முதலில் இதை சுத்தப்படுத்துங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு

அதன்பின், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 25ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும். 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று கூடுகிறது | Parliament To Meet Today

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் : எம்.பி.க்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் : எம்.பி.க்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026