டயானா கமகேவுக்கு எதிரான தீர்ப்பால் கிடைத்தது சுதந்திரம்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கி டயானா கமகேவுக்கு(diana gamage) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமான தீர்மானம் எனவும் அந்த முடிவின் மூலம் நாடாடாளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (nalin bandara) தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டயானா கமகேவிற்கு எதிரான தீர்ப்பு
“இன்று நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இரட்டை குடியுரிமை விவகாரத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் அதிக சுதந்திரம்
இன்று முதல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. இதன்மூலம் நாடாளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் அதிக சுதந்திரம் கிடைத்ததையும் இது நினைவூட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |