தாக்கியவர்களுக்கு விதிக்கப்பட்டது தடை
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலுக்கு சென்ற நிலையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஏனைய இரண்டு எம்.பி.க்களுக்கு ஒரு வாரத்திற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 20 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
அடுத்த கட்ட நடவடிக்கையில் சபாநாயகர்
இது தொடர்பாக விசாரணை நடத்த சபாநாயகரால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகளை ஆய்வு செய்த குழு, சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய இந்த மூன்று எம்.பி.க்களுக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

விசாரணைக் குழு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, சபாநாயகர் அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்