மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்: சஜித் கோரிக்கை
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மக்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (11) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வருகிறார்கள், தாக்குதல் நடத்துகிறார்கள், போகிறார்கள். எல்லா இடங்களிலும் வன்முறைகள் தலைதூக்கியுள்ளன.
மக்களின் பாதுகாப்பு
இது தொடர்பில் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி தீர்க்கப் போகின்றீர்கள்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கும் சில பொறுப்புக்கள் இருக்கிறன. இதனை தடுக்க நாங்கள் எங்களின் ஒத்துழைப்பை வழங்குவோம். கொலைகள் நடக்கின்றன. இது தொடர்பில் நாங்கள் கதைக்க வேண்டும். இது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.
எவ்வாறாயினும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும். இப்படி நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா? சட்டவாட்சியை பலமாக செயற்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை கோருகின்றேன்.
நாங்கள் எங்கள் பக்கத்தில் இருந்து சட்டம், ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக எங்களின் ஒத்துழைப்பை வழங்குவோம் என எதிர் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |