தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு: மாவை சேனாதிராஜா வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவானது கட்சியில் எந்த பிளவினையும் ஏற்படுத்தாத வகையில் இணக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும், கூறுகையில், "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் முன்வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
அதேவேளை, சித்தார்த்தனும் இந்த விடயம் குறித்து எமது கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி உள்ளதாக அறிகின்றோம்.
எனவே, தமிழ் மக்களிடத்திலும் எங்களது கட்சியிலும் எந்தவித பிளவையும் ஏற்படுத்தாத வகையில் இந்த தெரிவு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்தவற்றை காணொளியில் காணலாம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்