நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு (படங்கள்)
இன்று (23) காலை ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார்.
அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இது நடந்தது. இன்று நடைபெறவிருந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்காக சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டம்
இதேவேளை அரசாங்கத்தினால் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.
இதற்கு முன்னரும்,இச்சட்டமூலத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் அமைய மீள் வரைவு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சஜித் பிரேமதாச வேண்டுகோள்
இன்று நாடாளுமன்றம் கூடிய போது,இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பிரகாரம்,இன்று கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த சட்ட மூலத்தை இப்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |