ஜீலை மாதத்திற்கான இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு
ஜீலை மாதத்திற்கான இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு வருகின்ற 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
கடந்த 07 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இவ்வகையில், ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2023 ஜூலை 18 செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
விவாதங்கள்

அத்துடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2325/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் (அத்தியாயம் 235) மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2335/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன் பின்னர், பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றின் குழுநிலை விவாதம்
2023 ஜூலை 19 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.