21 ஆம் திருத்தத்துக்கு கட்சிகள் அவதான அனுமதி - கூட்டமைப்பும் பிரசன்னம்
அரச தலைவர், பிரதமரையும் அமைச்சவையையும் தன்னிச்சையாக நீக்கும் வகையில் 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யோசனைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானம்
எனினும் குறித்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், பல திருத்தங்களுடன் 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
The second round of discussions with the Party Leaders was convened today and a general consensus was reached regarding the 21st Amendment. However, the amendment may be subject to revisions based on the Supreme Court determination regarding the SJB constitutional amendment. pic.twitter.com/ft2poddIRS
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 3, 2022
குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டமைப்பும் பங்கேற்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
குறித்த சந்திப்பில் 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

