ஆட்சியமைப்பதில் ஏற்படப்போகும் இழுபறி : பெரும்பான்மையை பெற தவறிய கட்சிகள்
இதுவரை வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய,எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.இதனால் கட்சிகள் ஆசன ரீதியாக முன்னிலை வகித்தாலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை ஏற்படப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அம்பாந்தோட்டை பிரதேச சபையின் முடிவுகளுக்கமைய, அங்கு மட்டுமே ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
5 நகர சபைகள், 2 பிரதேச சபைகள் மற்றும் ஒரு மாநகர சபை என இதுவரையில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை வகிக்கின்ற போதும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
ஹப்புத்தளையில் சுயேட்சைக்குழு 1 முன்னிலை வகிக்கின்றது. எனினும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை அமையவில்லை.
ஏனைய சபைகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்ற போதும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
