ஒரு நாள் சேவை கடவுச்சீட்டு விநியோகத்தில் நடந்த மோசடி - கண்டுபிடிக்கப்பட்ட போலிகள்
Sri Lanka visa
Passport
By pavan
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பண மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம காவல்துறையினருக்கு கிடைத்த 03 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (31) சந்தேகநபர்கள் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபரிடம் இருந்து தேசிய அடையாள அட்டை, 15,000 ரூபா மற்றும் 9 போலி கடவுச்சீட்டில் தயாரிக்கப்பட்ட டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலம்பே மற்றும் கொழும்பு 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இன்று (01) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி