மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது : வெளியான அறிவிப்பு
இலங்கையில் இந்த வருடம் மாகாண சபை தேர்தல் (Provincial Council Elections) இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் (Panadura) நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் ஆறு மாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் எனவும் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பெருமளவு நிதி ஒதுக்கீடு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது. அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.
உள்ளூராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும், மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்த வேண்டும்.
சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும், நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் நடத்த முடியாது“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You May Like This
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
