அதிக இலாபம் ஈட்டும் இடைத்தரகர்கள், நஷ்டத்தில் விவசாயிகள்!
நுவரெலியா மற்றும் ராகலை பிரதேசங்களில் பேரிக்காய் பயிரிடும் விவசாயிகள் தமது விளைபொருட்களுக்கு இலாபகரமான சந்தையின்றி மிகவும் கவலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அதிகமான விளைச்சல் கிடைத்துள்ள நிலையில் இலாபகரமான சந்தை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் பெரும் மனக்கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் பேரிக்காய்களை பெற்றுக்கொள்வதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இலாபம் ஈட்டுதல்
ஒரு கிலோ பேரிக்காய்களை 700 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் கொள்வனவு செய்கிறார்கள் என்றும், இதனால் அவர்களின் உற்பத்தி செலவுகளைக் கூட ஈடு செய்ய முடியாமல் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதேவேளை சந்தையில் பேரிக்காய் கிலோ ரூபாய் 1600 முதல் 2000 வரை விற்பனை செய்து இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் இலாபத்தினை ஈட்டுகின்ற வேளை அதனை விளைவிக்கும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறோம் என்று கவலை தெரிவிகின்றனர்.