சீனாவின் கடும் மிரட்டலையும் மீறி தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க உயர் அதிகாரி
தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க சபாநாயகர்
சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்குச் சென்றுள்ளார்.
ஆசிய பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் தாய்வானில் சற்று நேரத்துக்கு முன்னர் தரையிறங்கியுள்ளார்.
அதிபர் பைடன் இந்த பயணத்துக்கு விருப்பம் வெளியிடாத நிலையில் பெலோசியின் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, பல தசாப்தங்களுக்கு பின்னர் தாய்வானுக்கு மேற்கொள்ளப்படும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரின் முதல் பயணமாக கருதப்படுகிறது.
சீனா,ரஷ்யா கடும் எச்சரிக்கை
சீனா, தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக பார்க்கிறது. அது சீனாவுடன் சேரவேண்டிய பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.
இந்தநிலையில் பெலோசியின் தாய்வான் பயணம், ஆத்திரமூட்டி, ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளன.
Twenty-six Senate Republicans, including McConnell, issue statement saying: “We support Speaker of the House of Representatives Nancy Pelosi’s trip to Taiwan.” pic.twitter.com/sU9bMlcCQ0
— Manu Raju (@mkraju) August 2, 2022
இதற்கிடையில் சீனாவின் எஸ்யு-35 போர் விமானங்கள் தாய்வானை நோக்கி செல்வதாக
அந்த நாட்டு அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.