அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அபராதம்: வெளியான அறிவிப்பு
கடற்கரையோரத்தில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்து.
குறித்த தீர்மானத்தை கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முறைமைத்துவ திணைக்களம் எடுத்துள்ளது.
அத்தகைய கட்டுமானங்ளுக்கு வருடாந்தம் அனுமதிப்பத்திரத்தை வழங்கும் செயன்முறை குறித்தும் அந்த திணைக்களம் பரிசீலித்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டடங்கள்
இருப்பினும், கடற்கரையிலேயே நேரடியாக அமைந்துள்ள சட்டவிரோத கட்டடங்கள் தற்போது அகற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பாதுகாக்கப்பட்ட கடற்கரை வலயத்திற்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத சில கட்டடங்களை அகற்றுவதன் மூலம் கடலோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
