ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் சஜித்
ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காது இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனினும் ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை தான் திருத்தியமைத்துத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(25) கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
ஓய்வூதிய திருத்தம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பின் ஓய்வூதிய திருத்தம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்ட 241 ஓய்வூதியம் பெறுநர்கள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பளப் பாக்கியோடு 2025-2026 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவோருக்கு இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்க வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழங்கிய பதிலையே அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும்.
பாரிய அநீதி
ஆனால் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு பதிலையும் நாடாளுமன்றத்தில் மற்றொரு பதிலையும் வழங்கியுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காது இருக்கிறது.
எனவே ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை தான் திருத்தியமைத்துத் தருகின்றேன்.” என குறிப்பி்ட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |