அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அதிரடி : பென்டகன் உளவுத்துறை தலைவர் பதவி நீக்கம்
Donald Trump
United States of America
By Sumithiran
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்( Pete Hegseth) பென்டகன் உளவுத்துறைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி குரூஸை(Lt Gen Jeffrey Kruse) பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
அவருடன் சேர்த்து மேலும் இரண்டு மூத்த இராணுவத் தளபதிகளும் பென்டகனால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் அணுசக்தி நிலைய தாக்குதல் திட்டங்கள் கசிவு
இருப்பினும், நீக்கத்திற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்குவது தொடர்பான உளவுத்துறை அறிக்கை ஊடகங்களுக்கு கசிந்ததால் இது ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 11 மணி நேரம் முன்
