தடுப்பூசி பெறுதலில் மக்கள் அசட்டையீனம் - சுகாதார அமைச்சர் வெளிப்படை
ஏனைய நாடுகளில் மக்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்துரைத்த அவர்,
தட்டுப்பாடு இன்றி மருந்துகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எவ்வித தட்டுப்பாடும் இன்றி வழங்க எதிர்பார்த்துள்ளதோடு, இதற்காக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் கூறினார்.
