சீனாவினால் அவமானப்படுத்தப்பட்ட மக்கள் வங்கி - தேரர் சீற்றம்
Chine
SriLanka
People's Bank
Omalpe Sophitather
Blacklist
By Chanakyan
சீனாவினால் இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டமைக்கு அமைச்சரவையே காரணம் என ஓமல்பே சோபித தேரர் (Omalpe Sophitathera) தெரிவித்துள்ளார்.
உரியமுறையில் உரப் பரிசோதனையை மேற்கொள்ளாமல் எல்சி ஆவணத்தை திறந்தமை இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையிலிருந்து அநேக பொருட்கள் சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல அநேகமான பொருட்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அரச தலைவர் உடனடியாக விசாரணையை மேற்கொண்டு இராஜதந்திர பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.