யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்ட மக்கள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற நிகழ்வுக்கு மக்கள் அழைத்து வரப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் வேலணையில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
அதன்படி, குறித்த நிகழ்வுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து மக்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து வரப்படதாக தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள்
இது குறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனவும், அந்த நம்பிக்கையை சிதறடிக்கமாட்டோம் என பொங்கல் நாளில் கூறுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பியதாகவும் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |