மக்கள் உண்ண உணவில்லை தற்போது இது தேவையா? ஆளும்கட்சி எம்.பி கேள்வி
food
people
chandima weeragody
By Sumithiran
மக்கள் உணவு மற்றும் பானம் இல்லாமல் அவதிப்படும்போது வரலாற்று சிறப்புமிக்க குளத்திற்கு அருகில் நடைபாதை அமைக்கப்பட வேண்டுமா என்று அரசாங்கத்தின் எம்.பி சந்திம வீரக்கொடி கேள்வி எழுப்பியுள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நேரத்தில் மக்கள் சாப்பிட சரியான அமைப்பு இல்லை என்றும் நடைபாதை அமைப்பதன் பயன் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு அருகில் நடைபாதை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதற்கு பௌத்த பிக்குகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.