வீதிகளில் மரணிக்கும் மக்கள் - இலங்கையில் தொடரும் அவலம்
Srilanka
Death
People
petrol station
Economy
Fuel
Mirigama
By Chanakyan
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றும் ஒருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவரே மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளார்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை, வத்தேகம - உடதலவின்னவில் 71 வயதான ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில்,நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றைதினம் நிட்டம்புவ - ஹொரகொல்ல பிரதேசத்தில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி