கொரோனாவால் பெருந்துயர் -நகைகளை விற்கும் மக்கள்
corona
people
gold
sales
By Sumithiran
கொரோனா தொற்று நோய் பரவியதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக கடந்த வருடத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 600 கிலோ நகைகள் அடமானம் அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய ஆபரணங்களின் கொள்வனவுகள் சுமார் 80% குறைந்துள்ளதாக கொழும்பு ஹெட்டி வீதியிலுள்ள நகைக்கடைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போதெல்லாம் தங்க நகைகளை விற்கவும், அடமானம் வைக்கவும் அதிகளவில் ஆட்கள் வருகின்றனர் என்கின்றனர் அந்த தொழிலதிபர்கள்.
இதனால் தங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக பொதுமக்களின் நகைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிடுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்