தெற்கில் திடீரென உயிரிழக்கும் வளர்ப்பு நாய்கள் மற்றும் பருந்து - அச்சத்தில் மக்கள்
hawk
death
people
dogs
hampanthoda
By Sumithiran
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றின் வேகம் உச்சம் பெற்றுள்ளதும் அதனால் ஏற்பட்டுள்ள மரணமும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பருந்து மற்றும் வளர்ப்பு நாய்கள் திடீரென உயிரிழந்து விழுவதாகவும் இந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
யோதவெவ, சந்தகிரிகம ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு இந்த உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 25 நாய்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.