இராணுவத்தின் கையில் கொடுத்த கணவன் எங்கே? கதறும் முன்னாள் போராளி
விசாரணை செய்துவிட்டு திருப்பி அனுப்புவதாக கூறி ஓமந்தை இராணுவச்சாவடியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட கணவன் இன்று வரையில் எங்கு உள்ளார் என்பது கூடத் தெரியவில்லை என முன்னாள் போராளி ஒருவர் கூறுகின்றார்.
இருபிள்ளைகளுடன் வாழும் இவர் வாழ்க்கையில் பெரும் போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்துவருகின்றார்.
அத்துடன் முன்னாள் போராளிகளில் வீடுகளிற்கு யாராவது புதியவர்கள் வந்து விட்டு சென்றாலோ அல்லது உதவி செய்தாலோ இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் வருகைதந்து விசாரணை செய்யப்படும் நிலமையும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. பயனாளியின் பெயர் - சச்சிதானந்தம் பத்மரஞ்சினி.
வசிக்கும் இடம் - முத்தையன்கட்டு, முல்லைத்தீவு .
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363
இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் “உறவுப்பாலம் பாகம் - 74” காணொளியில்