வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை

Sri Lanka Police Sri Lanka President of Sri lanka Law and Order
By Shalini Balachandran Apr 05, 2025 07:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “2005.04.04 அன்று பிற்பகல் அலுவலக பணி முடித்து பால்மா பேணி ஒன்றையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றேன்.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

சாரதி அனுமதிப்பத்திரம் 

இதன்போது மாலை 6.50 மணியளவில் மூளாய் காளி கோயிலுக்கு சமீபமாக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் இரு காவல்துறையினர் நின்றனர். (அவர்களின் சீருடை இலக்கம் 70853, 84310) (அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கம் 2794).

நான் இடதுபுறமாக சென்று கொண்டிருந்த போது அவர்கள் வலது பக்கத்தில் ஒரு இளைஞனை மறித்து வைத்து கதைத்துக்கொண்டு நின்றனர்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

என்னைக் கண்டதும் இடது பக்கம் வந்த காவல்துறையினர் என்னை மறித்து எங்கே போகின்றீர்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என விசாரித்துவிட்டு சாரதி அனுமதிப்பத்திரம் காப்புறுதிப் பத்திரம் போன்றவற்றை என்னிடம் இருந்து வாங்கினர்.

ஏன் விசாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன், இதன்போது ஒரு காவல்துறை அதிகாரி தனது இடது கையை நீட்டி உள்ளங்கையில் ஊதுமாறு பணித்தார்.

வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

காவல் நிலையம்

சாராயம் குடித்திருக்கிறாய் சோதிக்க வேண்டும் என்றனர், எங்கே பார்ட்டிக்கு போய் வருகின்றாய் எனக் கேட்டனர்.

கையில் ஊதினால் எப்படி சோதிக்க முடியும்? பலூனில் தானே சோதிப்பது எனக் கேட்டேன், நான் திருப்பி கதைத்தவுடன் எனது மோட்டார் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டனர்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

என்னை காவல் நிலையம் கொண்டு செல்லப்போவதாக அச்சுறுத்தி அடிக்க முற்பட்டனர்.

தமது மோட்டார் சைக்கிளை இயக்கி என்னை இடிப்பதற்கு முற்பட்டனர், எனது மோட்டார் சைக்கிளை காவல் நிலையம் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இறங்குமாறும் அச்சுறுத்தினர்.

டரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு : ஆட்டம் காணவுள்ள இலங்கையின் முக்கிய தொழில்துறை

டரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு : ஆட்டம் காணவுள்ள இலங்கையின் முக்கிய தொழில்துறை

காவல்துறையினர் அச்சுறுத்தல்

இதன்போது நான் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இந்த இரு காவல்துறையினர் அச்சுறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்தேன்.

ஆனால், அங்கிருந்து எனக்கு சாதகமாக பதில் அளிக்கப்படவில்லை என்னை மிரட்டிய காவல்துறை உத்தியோகத்தர்களின் இலக்கத்தை நான் குறிப்பெடுத்த போது ஒரு காவல்துறை உத்தியோகத்தர் பின்பக்கம் திரும்பி குனிந்து நின்று தனது ஆசனவாய்ப்பகுதியைக்காட்டி அதற்குள் இலக்கம் இருக்கு எடுக்குமாறு மிகக் கேவலமாக முறையில் நடந்துகொண்டார்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

என்னை பலமுறை தாக்க முற்பட்டனர், நான் காவல் நிலையம் செல்ல மறுத்த போது காவல்துறை வாகனத்தைக் கொண்டு வருமாறு தொலைபேசியில் யாருக்கோ கூறினர்.

பத்து நிமிட நேரம் என்னை வீதியில் வைத்து அச்சுறுத்தினர் பின்னர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினர்.

மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் : பெற்றோரின் அசமந்தத்தினால் நேர்ந்த கதி

மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் : பெற்றோரின் அசமந்தத்தினால் நேர்ந்த கதி

ஊடகவியலாளர் 

அவர் எனது விபரத்தைக் கேட்டறிந்து நான் ஒரு ஊடகவியலாளர் என இவர்களுக்கு கூறினார் இதன் பின்னர் எனது ஆவணங்களைக் கையளித்துவிட்டு இது உனக்கு இறுதி எச்சரிக்கை என அச்சுறுத்திவிட்டு சென்றனர்.

நான் வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர். ஊடகவியலாளர், அரச உத்தியோகத்தர், சமூக செயற்பாட்டாளன். எனக்கே வீதியில் இந்த நிலை என்றால் ஏனைய சாதாரண அப்பாவிப் பொதுமக்களை காவல்துறை எவ்வாறு நடத்துவார்கள் ? அவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் ?

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

வட்டுக்கோட்டை காவல்துறையினர் ஏற்கனவே, சித்தங்கேணியை சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கி படுகொலை செய்தனர்.

மேலும் பலரை சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர், கடந்த வருடம் பொன்னாலையில் அன்றாடச் சீவியத்திற்கே கஷ்டப்படும் அப்பாவிக் குடும்பம் ஒன்று குழாய்க் கிணறு வெட்டிய போது அனுமதி எடுக்கவில்லை எனக் காரணம் கூறி அவர்களிடம் இருந்து 8,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பறித்து சென்றனர்.

இவ்வாறு இவர்களின் அராஜகம் தொடர்ந்து செல்கின்றனர் எனவே, என்னை அச்சுறுத்திய மேற்படி இரு காவல்துறையினருக்கும் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்த எமது பிரதேச மக்களைப் பாதுகாக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஆரம்பம்

நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஆரம்பம்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்