அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூவரை மீட்ட உலங்குவானூர்தி!
Sri Lanka Air Force
Weather
Disaster
By Kanooshiya
நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலையால் தெதுறு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹவ எல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் சிக்கியிருந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
உலங்குவானூர்தி
அதன்படி, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Bell-212 ரக உலங்குவானூர்தி மூலம் குறித்த மூவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படையின் இரத்மலானை முகாமில் இணைக்கப்பட்டிருந்த மீட்புக் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்