சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கை - எதுவும் தெரியாதென கைவிரித்தார் பசில்
srilanka
china
basil rajapaksha
peoples bank
blaklist
By Sumithiran
இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி நேற்று (29) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
எனினும் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa)தெரிவித்துள்ளார்.
இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது, அவ்வாறானதொரு நிகழ்வு குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த முடிவு சீனாவின் வர்த்தக அமைச்சகத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.