மன்னாரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! தூக்கிலிடக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் சிறுமியொருவரை தகாதமுறைக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தூக்கில் இடுமாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சிறுமியின் உடலை மேலதிக பரிசோதனைக்காக காவல்துறையினர் கொண்டு செல்ல முற்பட்ட போதே அப்பகுதி மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனுடன் குற்றவாளியை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மேற்குறித்த சந்தேக நபருக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
தண்டனை கோரி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி தகாதமுறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அப்பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபரொருவரே இச்சம்பவத்திற்கு காரணமென சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பில் தலைமன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், மன்னார் காவல்துறையினர், மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மற்றும் உட்பட்ட குழுவினர் சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |