பசிலை விரட்டுங்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்
SLFP
Basil Rajapaksa
Dayasiri Jayasekara
By Sumithiran
இலங்கையை வங்குரோத்து நாடாக மாற்றியமைக்கு பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் மூன்று நான்கு மாதங்கள் இருந்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து சாம்பலில் இருந்து எழ முயற்சிப்பார் என்றும் அதற்கு முன் நாடு திவால்நிலைக்கு சென்றமைக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பசிலை விரட்டுங்கள்
பசில் ராஜபக்ஷ எங்கு சென்றாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை விரட்ட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி