அழகு நிலையமொன்றில் அடுத்தடுத்து மயங்கிய எழுவர்: பின்னர் வெளியான காரணம்!
கண்டி, பேராதனை வீதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றினுள் இருந்த ஒரு குழுவினர் இன்று (20) பிற்பகல் திடீரென மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்போது, ஐவர் பேர் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் மேலும் இருவர் கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 இளம் பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை
இந்த இளம் பெண்களில் நான்கு பேர் அழகு நிலையத்தில் ஊழியர்களாக பணிபுரிந்ததாகவும், மற்ற மூவர் அங்கு சேவைகளைப் பெற வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி - பேராதனை வீதியின் ஒரு பகுதியில் இன்று (20) ஏற்பட்ட மின் தடை காரணமாக, அந்தப் பகுதியில் அமைந்துள்ள பல வணிக நிறுவனங்கள் மின்பிறப்பாக்கியை பயன்படுத்தி வருகின்றன.
மயக்கத்திற்கான காரணம்
அதன்படி, இந்த அழகு நிலையத்தில் ஒரு மின்பிறப்பாக்கியும் இயக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணையில், அழகு நிலையத்தின் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடிவிட்டு, ஏசி மற்றும் மின்மிறப்பாக்கியை இயக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அழகு நிலையத்தில் இருந்தவர்கள் காற்றில் ஏற்பட்ட ஏதோ ஒரு பாதகமான நிலை காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
