“அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” நள்ளிரவில் தீப்பந்தத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்! (படங்கள்)
By Chanakyan
எரிபொருள் விலையேற்றம் மற்றும் மக்கள் சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை - தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டம் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தவலந்தென்ன பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் 50இற்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொத்மலை மற்றும் இறம்பொடை போன்ற பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் குரல் எழுப்பியிருந்தனர்.








மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி