மக்களின் வரிப்பணத்தை மொட்டு எம்.பி.க்களை திருப்திப்படுத்துவதற்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது : சஜித் பிரேமதாச
நாட்டு மக்களின் வரிப்பணத்தை மொட்டு எம்.பி.க்களை திருப்திப்படுத்துவதற்கு அதிபர் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அதிபரின் ஐ.நா சபைக்கான பயணம்
“நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம், வியாபார நடவடிக்கைகள் சீரழிந்துள்ள இவ்வேளையில், நாட்டை வங்குரோத்தடையச் செய்ய உறுதுணையாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபர் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடருக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரச அதிகாரிகளை அழைத்துச் சென்றாலும் நாடு வங்குரோத்தாகுவதற்கு காரணமானவர்களை அழைத்துச் செல்வது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் ஆகும்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட இது குறித்து கலந்துரையாடப்படாததால் இவ்வாறானதொன்றை செய்ய முடியாது“ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.