உறவினர் ஒருவர் உயிரிழந்ததை தாங்க முடியாத உறவுகள் வெளிப்படுத்திய துயரால் தொற்றியது கொரோனா
உறவினர் ஒருவர் உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாத உறவுகள் அவரின் சடலத்தை கட்டியணைத்து அழுத நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தலவாக்கலை - கட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் நபர் ஒருவர் சுகயீனம் காரணமாக வீட்டில் உயிரிழந்துள்ளார். இந்த சோகத்தில் உறவினர்கள் அவரது சடலத்தை கட்டி அணைத்து அழுது சோகத்தை வௌிப்படுத்தியுள்ளனர்.
பின்னர் உயிரிழந்த நபரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரது சடலத்தை தொட்டு அழுத 13 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.