இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
corona
sri lanka
people
By Shalini
கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் சிலர் சமூக இடைவெளியை கவனத்திற்கொள்ளாது நடந்துகொள்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக இடைவெளி மற்றும் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கிடையே கொவிட் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.