மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த அவலம்!
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் இசுரு மதுஷான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
குறித்த மாணவன் கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவன் இன்றைய தினம் (4) உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |