பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
நூற்றாண்டு விழாவையொட்டி பேராதனைப் பல்கலைக்கழகம் பல கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு முன்னுக்கு கொண்டு வரப்படும் என அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம். டி. கல்பவன்ச தெரிவித்தார்.
தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளின் தரம் மற்றும் அளவை அதிகரிப்பது இதன் குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு அபிவிருத்தித் திட்டம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கடந்த 16ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது அங்கு உபவேந்தர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவியுடன்
பேராதனைப் பல்கலைக்கழகம் 2024ஆம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்யும் என்று தெரிவித்த துணைவேந்தர், மேலும் பல கட்டங்களின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தை தரமான முறையில் அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவியுடன் அபிவிருத்தித் திட்டம் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த துணைவேந்தர், அடுத்த 25 ஆண்டுகளில் ஆராய்ச்சி வாய்ப்புகளை அதிகரிப்பது உட்பட பல இலக்குகளை எட்டுவோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |