தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் - ரணிலிடம் தெரிவித்தது மொட்டு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கிராமத்தில் பணியாற்றியதால், தேர்தலில் மக்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் இல்லை எனவும், தேர்தல் தயாராகும் போது மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றின் மீது கவனம் செலுத்தி முடிவெடுக்க வேண்டாம் என்றும் சாகர காரியவசம் கேட்டுக்கொண்டார்.
அரசசேவைகளை மீள ஆரம்பித்தல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சேர்ப்பு இடைநிறுத்தங்களைத் தீர்த்து இடைநிறுத்தப்பட்ட அரச சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு அதிபரிடம் கோரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்

அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெளியே தேர்தலின் போது பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.