பயிலுனர் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
soon
trainee graduates
permanent appointmen
By Jaso
அரசசேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி(J.J. Ratnasiri) தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசசேவையில் இதுவரை 58,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காகவே இத்தகவல் சேகரிக்கப்படுகின்றது.
பயிலுனர் பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக நியமிக்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததாகவும், அதற்கமைய அவர்களுக்கு துரிதமாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.