பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்கள் : வெளியான தகவல்
பிரித்தானிய (United Kingdom) குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், கடந்த நவம்பரில் அமெரிக்காவில் (United States) பொதுத்தேர்தல் நடைபெற்றதுமே பிரித்தானிய குடியுரிமை பெறுவது தொடர்பில் இணையத்தில் தேடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில், பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாக பிரித்தானிய உள்துறை அலுவலகமும் தெரிவித்துள்ளது.
அதிகமான அமெரிக்கர்கள்
உள்துறை அலுவலக தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 6,100 இற்கும் அதிகமான அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
குறிப்பாக, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் ட்ரம்ப் ஜனாதிபதியாகலாம் என்னும் நிலை உருவான நேரத்தில், பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பித்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய குடியுரிமை
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில், சுமார் 1,700 அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பித்ததாக பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தேர்தல் பிரச்சாரத்தைத் ஆரம்பித்ததுமே அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் தீவிரமாக ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டதாகவும் சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் முக்கிய காரணமாக அமைந்துள்ளதை தெளிவாகக் காணமுடிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
