வவுனியாவில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
வவுனியா (Vavuniya) மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன், வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற் சந்தை இன்று (05.03.2025) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர மற்றும் உதவி மாவட்ட செயலாளர் சாபர்ஜா, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சனா குமார.ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இத்தொழில் சந்தையில் 30க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வருகை தந்திருந்ததுடன், 100க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பினை பெறும் நோக்குடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் தொழிற் சந்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மாபெரும் தொழிற் சந்தையானது எதிர்வரும் 2025.03.08 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இத்தொழிற்சந்தை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள். கணக்கியல்துறை, ஹோட்டல்கள், காப்புறுதித்துறை, ஆடைத் தொழிற்சாலை, பாதுகாப்புச்சேவை.
மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்பு
மற்றும், தாதியர் வேலைவாய்ப்பு, கணனித்துறை, தொழிற்பயிற்சி நெறிகள், ஹோட்டல் முகாமைத்துவம், சுயதொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வருகை தரவுள்ளதுடன் தங்கள் நிறுவனத்தில் காணப்படும் 500 இற்கு மேற்பட்ட வெற்றிடங்களுக்காக அன்றையதினமே நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளன.
மேற்படி தொழிற்சந்தை நிகழ்வில் தொழில்தேடும் இளையோர்கள் தங்களது தகமைகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் கலந்துகொள்வதன் மூலமாக தமக்குப் பொருத்தமான தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே தொழில் வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ளக்கூடிய இவ்வாய்ப்பினைப் பயன்டுத்தி பயனடையுமாறு யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு 0212219359 என்ற தொலைபேசியூடாக தொடர்புகொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் - கஜந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
