நாளை முதல் மின்வெட்டு -வெளிவந்தது அறிவிப்பு

permission tomorrow power cut
By Sumithiran Jan 09, 2022 03:45 PM GMT
Report

நாளை திங்கட்கிழமை முதல் மின் வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறும் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

எனவே இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு, தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரத்தை இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மின்சார பாவனையாளர்கள், கடந்த ஓரிரு வருடங்களாக தமக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளமையே, மின் வெட்டை அமுல்படுத்த காரணம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த ஓரிரு வருடங்களில் மாத்திரம் சுமார் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மின் பாவனையாளர்கள், இலங்கை மின்சார சபைக்கு செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இதனால், இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமையினால், மின்சார உற்பத்திக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு, மின் பாவனையாளர்களும் ஒரு காரணம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார். இதனால், மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை உரிய முறையில் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி