தென்னை மரங்களை வெட்டுபவர்களுக்கு சிறை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் அதற்கான அனுமதி பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் (Divisional Secretariat) மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் (Coconut Development Authority) பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
விதிக்கப்படவுள்ள தண்டனை
அதாவது 2023 மரம் வெட்டுதல் சட்டத்திற்கமைய தென்னை மரம் வெட்டும் போது அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அறியாமை காரணமாக அனுமதியின்றி மக்கள் தென்னை மரம் வெட்டுவதில் ஈடுபடுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உரிய அனுமதியின்றி தென்னை மரத்தை வெட்டுபவர்கள் 6 மாதம் சிறைச் செல்ல நேரிடும் என்பதுடன் மரம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் அந்த சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கடந்த சில மாதங்களாக தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதுடன் தேங்காய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |