தொடருந்து சேவையில் பெண்களை உள்ளீர்க்க அனுமதி : நீதிமன்றுக்கு அறிவிப்பு
தொடருந்து திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்த விடயத்தினை சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இலங்கை தொடருந்து திணைக்களத்தில் தொடருந்து சாரதி, தொடருந்து கட்டுப்பாட்டாளர், தொடருந்து நிலைய அதிபர் மற்றும் தொடருந்து திணைக்கள மேற்பார்வை முகாமையாளர் பதவிகளுக்கும் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னின்று செயற்பட்ட சமூக செயட்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், நீதிமன்றில் நாம் தொடுத்த வழக்கின் அடிப்படையில், தொடருந்து திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் ஆண்கள் மாத்திரம் தான் விண்ணப்பிக்க முடியும் என்ற வரையறையை நாம் சவாலுக்கு உட்படுத்தினோம்.
தொடருந்து நிலைய உழியர்கள்
அதன் இறுதிக் கட்ட விசாரணை இன்று உயர் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்றையதினம் 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, சட்டமா அதிபர் சார்பாக பெண்களை தொடருந்து நிலைய அதிபர்கள் மட்டுமல்ல, தொடருந்து சாரதிகள், முகாமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற அனைத்து துறைகளிலும் உள்ளீர்ப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆகவே இன்றிலிருந்து தொடருந்து நிலைய உழியர்களை உள்வாங்கும் செயற்பாட்டில், பெண்களை பாரபட்சம் காட்டும் செயற்பாடடை சட்ட ரீதியாக நீக்கியுள்ளோம்.
இனிவரும் காலங்களில் தகைமையுடைய பெண்களை இந்த தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்கள்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |