இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் புகுந்த ஆயுததாரி: நெதர்லாந்தில் சம்பவம்
Netherlands
World
By Dilakshan
நெதர்லாந்தில் இரவுநேர கேளிக்கை விடுதியொன்றினுள் ஆயுதமேந்திய நபர் ஒருவர் புகுந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமான ஈடியில் உள்ள கேளிக்கை விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, சந்தேகநபர் விடுதிக்குள் இருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள்
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, பிணைக் கைதிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளதுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்