கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த நபர் : அம்பலமான செயல்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் காத்திருந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை குறைந்த விலையில் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் வாங்கிய சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 107 மதுபான போத்தல்களுடன் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்று (05) காலை குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனடிப்படையில், விசாரணைகளின் போது கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இந்த நபர் வெளிநாட்டு மதுபான போத்தல்களை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு மதுபான போத்தல்
அத்தோடு, கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களின் ரெட் லேபிள், ஜெக் டேனியல் மற்றும் விஸ்கி போத்தல்கள் அதிகளவில் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடமிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |